தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

Thursday, September 16, 2010

தந்தை பெரியார் 132 பிறந்தநாள் சூளுரை

தமிழ்த் தேசியத் தந்தை பெரியாரின் 132 ஆவது பிறந்த நாளில் அவர் கொள்கைச் சுடரேந்தி பயணிப்பது காலத்தின் தேவை. பெரியாரை நினைவுகூர்தல் என்பது அவர் நம்மிடம் கைமாற்றி விட்டுப்போன இலட்சியங்களை வெற்றி பெறச் செய்வதற்கு சூளுரைப்பதே ஆகும். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் பெரியார் பிறந்தநாளை(செப்டம்பர் 17) முன்னிட்டு சுவரொட்டி மற்றும் துண்டறிக்கை மூலமாக மக்களிடம் பரப்புரை செய்தனர்


Friday, September 10, 2010

தமிழர் எழுவர் விடுதலைக் குரல்

இராசீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்ற நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய நால்வரும் 19 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறையில் அல்லலுற்று வருகின்றனர்.

கொடுமையான தடா சட்டத்தின் கீழ் கைதாகி உண்மையான நீதி கிடைக்காமல் தூக்குத் தண்டனையும் வாழ்நாள் சிறைத் தண்டனையும் பெற்றவர்கள் இவர்கள். தமிழர்கள் என்பதினாலேயே எழுவருக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை. இவர்களுக்கு நீதி பெற்றுத் தருவது உலகத் தமிழர் ஒவ்வொருவரின் கடமையாகும். இவர்களின் விடுதலைக்குக் குரல் கொடுக்கவே தோன்றியுள்ளது தமிழர் எழுவர் விடுதலைக் குரல். இது மனித உரிமைகளுக்கான குரல். மனித உரிமைகளின் மீது பற்றுக் கொண்ட அனைவரின் குரலும் இக் குரலுடன் இணையட்டும். நீதி வெல்லட்டும்


Sunday, September 5, 2010

திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம் நூல் அறிமுக நிகழ்வு