தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

Thursday, May 20, 2010

ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் போராட்ட நாயகன் பிரபாகரன் – தோழர் தியாகுவின் எழுச்சியுரை

ஈரோடு மாவட்டத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்க்க் குறு நடைப் பயண நிறைவு நாள் உரை.

தியாகு1

Get this widget | Track details | eSnips Social DNA

தியகு2

Get this widget | Track details | eSnips Social DNA

தியாகு3

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கிக் கேட்க:

http://www.mediafire.com/?ynmdyjnzo1m

Tuesday, May 18, 2010

குருதி பிசுபிசுக்கும் கொலைகளத்தில் கூத்து, கும்மாளமா? : தடுக்க வேண்டும் தமிழ்த்திரையுலகம்!

குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதை பழையது. குழியில் போட்டுப் புதைத்துவிட்டு மேலே ஏறிக் கூத்தாடும் கதை புதியது. வருகின்ற ஜுலை 3,4,5 தேதிகளில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இதுதான் அரங்கேறப்போகிறது. ஆம். முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்களை மொத்தமாய்க் கொன்று புதைத்தவர்கள் கும்மாளமிடத்தான் அய்ஃபா (IIFA) விருது வழங்கும் விழாவைக் கொழும்பிற்கு மாற்றியுள்ளனர்.

தென்கொரியத் தலைநகர் சியோலில் நடப்பதாக இருந்த சர்வதேச இந்தியத் திரைப்படக்கழக விருது விழாவை சந்தடியின்றிக் கொழும்புக்கு மாற்றியதில் இந்திய அரசுக்கு ஒரு நோக்கம் உள்ளது. கொழும்பின் கையில் படிந்துள்ள தமிழனின் ரத்தக்கறையைத் துடைத்து தன் பாவத்தையும் மறைத்துக்கொள்வதே அது! இந்தியத் தொழில் வணிகக் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI) இந்த விழாவில் வைத்து புதிய ஆதாய வாசல்களைத்) திறக்கவும், இலங்கைச் சந்தையில் விரிவாக வலை வீசவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழர் பகுதிகளில் மறுநிர்மாணம் என்ற பெயரில் கிடைக்கப் போகும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான கான்ட்ராக்டுகள்மீது குறி வைத்துள்ளது. புதிய செல்பேசி சந்தைக்காகவும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மூன்று நாள் விழாவில் ஒரு நாள் படங்காட்டுவதற்காம்! ஒருநாள் வணிக ஒப்பந்தங்களுக்காம்! ஒருநாள் 20-20 கிரிக்கெட் கேளிக்கைக்காம்! எல்லாவற்றிலும் கவர்ச்சிக்குக் குறைவைக்காமல் இந்திய திரைப்படத் தாரகைகளின் ஆட்டம் பாட்டம் இருக்குமாம்!

ஐய்ஃபாவின் முதல் விருது விழா 2000-ல் லண்டனில் நடைபெற்றது. இது புகழையும், பணத்தையும் வற்றாமல் அள்ளிக்கொடுக்கும் அட்சய பாத்திரம் என்று அப்போதே தெரிந்துவிட்டது. அதிலிருந்தே, கனடா, தென்கொரியா, அயர்லாந்து போன்ற வளர்ந்த நாடுகள் இந்நிகழ்ச்சியை எங்கள் நாட்டில் நடத்துங்கள்என்று கேட்க ஆரம்பித்துவிட்டன. இந்நிகழ்ச்சியின் மூலமாகத் தங்கள் சுற்றுலாத்துறை வளம் கொழிக்கும் என்பது இந்நாடுகளின் கணக்கு. நான்காண்டுகளுக்கு முன்பே ஐய்ஃபா விழாவைத் தொலைக்காட்சியில் கண்டு களித்தவர்கள் 45 கோடிப் பேர். உலக அளவில் ஆஸ்காருக்கு அடுத்த இடம் ஐய்ஃபாவுக்குதான்!

இந்த விழாவை நடத்தவிரும்பும் ஒவ்வொரு நாடும் அதற்காக ஐய்ஃபா அமைப்புக்கு 560 கோடி ரூபாய் தரத் தயாராயுள்ளன. அய்ஃபா-2010 விழாவை நடத்துவதற்கான போட்டியில் அயர்லாந்துதான் 2009 இறுதிவரை முன்னணியில் நின்றது. பிறகு தென்கொரியா மூக்கை நீட்டி முந்திக்கொண்டது. 2010 ஜனவரி 26 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தென்கொரிய அதிபர் லீமியூங்பாக் அவர்களிடம் இதற்கான அறிவிப்பை இந்திய தரப்பு அதிகார பூர்வமாக வழங்கியது.

2010 பெப்ரவரி 27 வரை இந்தப் பட்டியலிலேயே கொழும்பு இல்லை. பிறகுதான் கொழும்பு பெயர் அடிபட்டது. உடனே அதற்குத்தான் என்று உறுதியும் செய்யப்பட்டு விட்டது. இது இலங்கையின் மாபெரும் உலக சாதனைஎன்று சொல்லி மகிழ்கிறார் அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் அச்சாலா ஜகோடா.

கொழும்பு ஐய்ஃபா விழாவின் முதன்மைத் தூதர் அமிதாப்பச்சன். அவரும் ஷாருக்கானும், ஐஸ்வர்யா ராயும் உலகப்புகழ் பெற்ற பாலிவுட் கலைஞர்களும் மேடையில் தோன்றி இலங்கையில் அழகும் அமைதியும் குடி கொண்டிருப்பதைஉலகமே பார்க்க உதவப் போகிறார்களாம். உலக மக்கள் தீர்ப்பாயம் (People’s Tribunal) டப்ளினில் வைத்து இலங்கையைப் போர்க்குற்றவாளியாக அறிவித்த இரண்டு மாதங்களில் எப்படி அழகும் அமைதியும்அங்கு குடிகொண்டன என்று அவர்கள் விளக்க வேண்டும்.

தமிழர்களின் வேண்டுகோளை மதித்து அமிதாப் விலகிக்கொண்டதாக ஒரு செய்தி! இது உறுதியானால் மகிழ்ச்சி! மற்றவர்களும் விலகிக்கொண்டு, விழாவை வேறிடத்தில் நடத்த வழி செய்ய வேண்டும். (சல்மான்கான் தான் இப்போதைய தூதர் என்பது கடைசிச் செய்தி!)

சர்வதேச இந்திய திரைப்பட விழா என்று பெயருக்குச் சொல்லப்பட்டாலும் பெரும்பாலும் இந்தித் திரைப்பட விழாவாகவே இதுவரை நடத்தப்பட்டது. ஆனால் இம்முறை தமிழ்த் திரைக் கலைஞர்களையும் இழுக்கச் சந்தடியின்றி ஒரு முயற்சி நடைபெறுகிறது. மணிரத்னத்தின் ராவணன்கொழும்பு விழாவில் திரையேறும் என்று வந்த செய்தியை அவர் மறுத்திருக்கிறார். ஃபிக்கியின் ஊடக / கேளிக்கை வணிகப்பிரிவின் தலைவர் திரு. கமலஹாசன் அவர்கள் இவரையும் ரஜினியையும், ரஹ்மானையும் கொழும்பு ஆட்கள் தனித்தனியாக அணுகி அழைத்ததாகவும் இவர்கள் மறுத்து விட்டதாகவும் ஒரு செய்தி. தமிழன் இரத்தம் படிந்த கொழும்பில் விழா நடத்த நாங்கள் தானா கிடைத்தோம்என்று சூடாகக் கேட்டாராம் பிரகாஷ்ராஜ். இந்த செய்திகளெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்பது நம் விருப்பம்.

ஆனால் இது போதாது. தமிழ்த் திரைப்பட அமைப்புகள் உடனடியாகக் களமிறங்கி, இந்திய அளவில் யாரும் கொழும்பு விழாவில் கலந்து கொள்ளவிடாமல் செய்ய வேண்டும். முள்ளிவாய்க்கால் படுகொலையைத்தான் நம்மால் தடுக்க முடியவில்லை. கொலைக்களத்தில் கூத்தடிப்பதையாவது தடுக்கலாம்தானே? இது நம் தமிழ் உறவுகளுக்கு ஆறுதலாக மட்டுமல்ல, கொழும்புக்கும் அதன் இந்தியக் கூட்டாளிகளுக்கும் நம் உணர்வுகளைச் சொல்லி எச்சரிப்பதாகவும் அமையும் அல்லவா?

இன அழிப்புப் போரை நிறுத்தக்கோரி தமிழ்த் திரையுலகம் போராடியதை யாரும் மறந்திருக்க முடியாது. இராமேசுவரத்துக்குச் சென்று சிங்களவனுக்குக் கேட்கட்டும் என்று குரல் கொடுத்தோம். நடிகர்கள், தொழிலாளர்கள், சின்னத்திரைக் கலைஞர்கள் என்று அடுத்தடுத்து உண்ணாவிரதப் போராட்டம் செய்தோம். பாரதிராஜா, செல்வமணி, மணிவண்ணன், சீமான், அமீர் போன்றவர்கள் திரையுலகின் முழுவலிமையோடும், தமிழக மக்களைத் தட்டியெழுப்பப் பாடுபட்டதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எல்லாமே முடிந்துவிட்டது என்று சோர்ந்து விடவோ, ஓய்ந்து விடவோ கூடாது. ஐய்ஃபா விழா கொழும்பில் நடைபெற விடாமல் செய்ய நம்மால் முடியும். கோலிவுட்டின் கோரிக்கையை பாலிவுட்டால் அலட்சியப்படுத்த முடியாது.

நிறவெறி தாண்டவமாடிய தென் ஆப்பிரிக்க வெள்ளை அரசைத் தனிமைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த அதே இந்தியாதான், இப்போது தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசு உலகில் தனிமைப்பட்டு விடாமல் பாதுகாத்து வருகிறது. இந்தியா செய்வது பச்சை அயோக்கியத்தனம் என்று உணர்த்த இது சரியான தருணம், சரியான வாய்ப்பு! விழிப்புடன் செயல்படவேண்டிய தருணத்தில் தூங்கிவிட்டுப் பிறகு

சீனாவில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்துக்கான சுடர் இந்தியா வந்தபோது அதை ஏந்தி ஓடிய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பெயரெல்லாம் மறந்துவிட்டது. திபெத்தில் சீன அரசு நடத்திவரும் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுடர் ஏந்த மறுத்த இந்தியக் கால்பந்து வீரல் பெய்ச்சுதங் பாட்டியாவின் பெயர் எல்லாருக்கும் நினைவிருக்கிறது.

பாட்டியாவால் சீன ஒலிம்பிக்கைத் தடுக்க முடியவில்லை. ஆனால் தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் மனம் வைத்தால் ஐய்ஃபா 2010 கொழும்பில் நடைபெறாமல் தடுக்க முடியும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் - செய்தக்க

செய்யாமை யானும் கெடும்

என்ற குறளை நினைவுபடுத்தி, என் சக திரைப்படக் கலைஞர்களை ஆதரவு தருமாறு அழைக்கிறேன்.

கவிஞர் தாமரை

Thursday, May 6, 2010

கொட்டும் மழையிலும் கொள்கை மறவர்கள்

அடுத்த நாள் காலை(29.04.10) அந்தியூரில் இருந்து புறப்பட்ட பயணக்குழு சின்னத்தம்பி பாளையம், அத்தானி ஆகிய ஊர்களைக் கடந்து நண்பகல்வாக்கில் கள்ளிப்பட்டியை வந்தடைந்தது. நாம் தமிழர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் பயணத் தோழர்களை வரவேற்று நண்பகல் உணவளித்தார். பகல் ஓய்வுக்குப் பின் புறப்பட்ட தோழர்கள் துரையம்பாளையம், பங்களாப்புதூர், தூக்கநாயக்கன் பாளையம் ஆகிய் ஊர்களின் வழியாக இரவு ஏழூர் வந்தடைந்தனர்.

அந்தியூருக்கும் ஏழூருக்கும் இடையேயான தொலைவு ஏறத்தாழ 30 கி.மீ ஆகும். குறுநடைப்பயணத்தில் இது ஒரு நீண்ட பயணமே. மக்கள் தொண்டர்களுக்கு நெடுநடைப் பயணமும் குறுநடைப் பயணமும் ஒன்றே. மக்கள் தொண்டாற்றக் கிடைத்த வாய்ப்பே.

வழிநெடுகத் துண்டறிக்கை வழங்கியும் உண்டியல் ஏந்தியும் வந்தனர் தோழர்கள். அத்தானியிலும் தூக்கநாயக்கன் பாளையத்திலும் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. தோழர் பாரதி ஏறிவரும் விலைவாசி, மின்வெட்டு, கல்வி வணிகமயமாக்கல், நளினி விடுதலை, ஈழ மக்கள் துயர் ஆகியன குறித்து விரிவாகப் பேசினார். இரவுணவும் தோழர் செழியனால் வழங்கப்பட்டது.

30.04.10 வெள்ளி காலையில் ஏழுரில் இருந்து கிளம்பிய தோழர்கள் நால்சாலை(ரோடு), பெரியகொடிவேரி கடந்து நண்பகலில் கொடிவேரி அணையை வந்தடைந்தனர். இப் பயணத்தில் காலை உணவு தோழர்களுக்குப் பழைய சோறாக இருந்தது. இரவு மிஞ்சிய சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்து காலையில் அதை அமுதாக உண்ட தோழர்களின் மனப் பக்குவத்தை எப்படிப் புகழ்வது?.




கொடிவேரி அணையில் ஆடைகளைத் துவைத்தும் நீந்திக் குளித்தும் களைப்பைப் போக்கினர் பயணக் குழுவினர். வெயிலில் களைத்து வந்த தோழர்களைக் கொடிவேரி அணை தாயாக அணைத்து மகிழ வைத்தது.



மாலையில் கொடிவேரி அணையில் இருந்து புறப்பட்ட பயணக் குழுவினர் ஒட்டர்பாளையம் வழியாக ம. குமாரபளையம் வந்தடைந்தனர் அங்கு மொழிப்போர் ஈகி முத்து நினைவுக் கல்வெட்டு முன் நின்று உறுதிமொழி ஏற்றனர். இந்நினைவுக் கல்வெட்டு புரட்சிகர இளைஞர் முன்னணியும், தமிழர் பண்பாட்டுக் கழகமும் இணைந்து உருவாக்கியதாகும்.

அங்கிருந்து புறப்பட்ட தோழர்களைச் சத்தியமங்கலம் வாசலிலேயே கொட்டும் மழை இடி முழங்க வரவேற்றது. கத்திரி வெயிலில் காய்ந்து கருகிய தோழர்களை ஒருவகையில் இம் மழை குளிவித்தது என்றே கூறலாம். மக்கள் தொண்டர்களைக் கண்டு மழையும் மனம் இரங்கியதோ ?.

ஆனால் மழை மேலும் கனக்க கனக்க சாலையில் நடப்பதும் சிரமம் ஆனது. மழையில் நடக்கத் தடுமாறிய தோழர்களை ஊர்தியில் ஏற்றி அனுப்பி விட்டு கொட்டும் மழையிலும் கொள்கைப் பயணத்தைத் தொடர்ந்தனர் மற்ற தோழர்கள். இரவுத் தங்கலுக்காகச் சத்தியமங்கலத்தைக் கடந்து கெஞசனூர் சென்றது பணக்குழு. இப்பயணத் தொலைவும் ஏறத்தாழ 30 கி.மீட்டருக்கும் கூடுதலே. காந்தளகம் புத்தக நிலைய உரிமையாளர் திரு. ஆறுமுகம் தோழர்களை வரவேற்று இரவு உணவளித்தார்.



இரவு மழையாகப் போனதால் சத்தியமங்கலத்திற்குள் பரப்புரை மேற்கொள்ள முடியாமல் போனது. அதனால் காலையில் தோழர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து ஒரு குழு சத்தியமங்கலத்திற்குள் பரப்புரை மேற்கொள்வது எனவும் மற்றொரு குழு நடைபயணத்தை தொடர்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. தோழர்களுக்குக் காலை உணவைத் தமிழர் பண்பாட்டுக் கழகத் தோழர் கிருட்டிணசாமி வழங்கினார்.

சத்தியமங்கலத்தில் இருந்து கோபி வரை மேற்கொண்ட மே நாள் குறுநடைப் பயணமும் 29 கி.மீட்டரைத் தொட்டது. அரியப்பம் பாளையம், மூலக்கிணறு, கொத்துக்காடு, இண்டியம் பாளையம், அரசூர், மா. கோம்பை, சிங்கிரிபாளையம், காசிபாளையம், கரட்டடிபாளையம் ஆகிய ஊர்களில் பரப்புரையும் நிதி தண்டலும் செய்தனர் தோழர்கள். கோபியில் மே நாள் விடுமுறை என்பதால் குறைவான கடைகளே திறந்திருந்தன. இப்பயணத்தில் பகல் உணவும் இரவுணவும் ம.தி.மு.க மாவட்டத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் ம.கந்தசாமி அவர்களால் வழங்கப்பட்டது.

மே நாளுக்கு அடுத்த நாளும் விடுமுறை நாளாக (ஞாயிறு) அமைந்ததால் பரப்புரையும் தண்டலும் எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை. இவ்வேமாற்றத்தைப் போக்குவதாக அமைந்தது இரவு நடைபெற்ற மே நாள் சிறப்பு – குறுநடைப் பயண விளக்கப் பொதுக்கூட்டம்.

பொதுக்கூட்டதிற்கு ம.தி.மு.க மாவட்டத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் ம.கந்தசாமி தலைமை தாங்கினார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர் இரவி வரவேற்புரை ஆற்றினார். நாம் தமிழர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செழியன், பெரியார் திராவிடர் கழக் மாவட்டச் செயலாளர் இராம இளங்கோவன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி வழக்குரைஞர் ப.பா.மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு நீண்டதொரு சிறப்புரை ஆற்றினார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர் குமரவேல் நன்றியுரை வழங்க பொதுக்கூட்டம் நிறைவுற்றது.

கோபியில் இரு நாள்களும் இரவு தங்குவதற்கு தி.மு.க இலக்கிய அணி மாவட்டச் செயலாளர் குமணன் தாய்த் தமிழ்ப் பள்ளியை ஏற்பாடு செய்திருந்தார். இரண்டாம் நாள் காலை உணவையும் பகல் உணவையும் செழியன் வழங்கினார்.

Monday, May 3, 2010

குறுநடை - மே நாள் பொதுக்கூட்டம்

02.05.2010 ஞாயிறு அன்று கோபிசெட்டிபாளையம் பெரியார் திடலில் நடைபெற்ற குறுநடைப் பயண விளக்கம் – மே நாள் சிறப்பு பொதுக்கூட்ட்த்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு ஆற்றிய உரை

பதிவிறக்கிக் கேட்க :

http://www.mediafire.com/?my5mmy2u04t


நன்றியும் வேண்டுகோளும்

நெடுநடைப் பயணத்தின் தொடர்ச்சியாகக் குறுநடைப் பயணம். சரியாகச் சொன்னால், குறுநடைப் பயணங்கள்! அதே முழக்கங்கள்: தமிழ் உரிமை! தமிழர் இன உரிமை! தமிழ் மக்கள் வாழ்வுரிமை! பழைய கோரிக்கைகளோடு பயணம் பட்டறிவால் பெறப்பட்டவையும் பயணப் பரப்பு சார்ந்தவையுமான புதிய கோரிக்கைகள் தமிழ் மீட்பு தமிழர் மீட்புச் சிந்தனைப் பரவல்! தமிழ் மீட்பு நிதிய இலக்கான ஒரு கோடி நோக்கிய தொடர் முயற்சி!

முதல் குறுநடைப் பயணம் ஈரோடு மாவட்டத்தில் வருகிற 28.04.2010இல் புறப்பட்டு ஈரோடு மாவட்டமெங்கும் சற்றொப்ப 300 கிலோமீட்டர் 13 நாள் நடந்து 10.05.2010இல் ஈரோட்டில் நிறைவடைகிறது. பயணத் தலைவர்: தோழர் மு. மோகன்ராசு, ததேவிஇ ஈரோடு மாவட்டச் செயலாளர்.

அடுத்தடுத்து முகவை - மதுரை மாவட்டங்களிலும், திருப்ப+ர், கோவை, கரூர் மாவட்டங்களிலும் குறுநடைப் பயணத்துக்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. நீங்களும் நடக்கலாம். உங்கள் பகுதிக்கு அழைத்தும் நடக்கச் செய்யலாம். தொடர்பு கொள்ளுங்கள், பேசுவோம்!

நன்றியும் வேண்டுகோளும்

தமிழ் மீட்பு நிதியத்திற்குப் பங்களிக்க வேண்டி தமிழகமெங்கும் - ஏன் உலக அளவிலும் கூட - தமிழன்பர்களுக்கு வேண்டுகோள் விடுத்தோம். தோழர் கோ. நடராசன் அவர்களின் வங்கிச் சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்தலாம் என்று தெரிவித்திருந்தோம். அவ்வாறு பலரும் பணம் செலுத்திய போதிலும், செலுத்தியவர் பெயர், தொகை, நாள் ஆகிய செய்திகள் தெளிவாகத் தெரியவில்லை. இவ்விதம் பணம் செலுத்திய அனைவர்க்கும் நன்றி தெரிவிக்கும் போதே, மேற்கண்ட செய்திகளை விரைவில் தொலைபேசி அல்லது மடல் வாயிலாகத் தெரிவிக்க வேண்டுகிறோம்.

தியாகு

92831 10603